ஒரு குவிண்டால் பருத்தி ரூ.7,309-க்கு ஏலம்

ஒரு குவிண்டால் பருத்தி ரூ.7,309-க்கு ஏலம் போனது.

Update: 2023-08-23 19:21 GMT

கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நேற்று நடந்தது. விற்பனைக்கூட கண்காணிப்பாளர் பிரியாமாலினி தலைமையில், மேற்பார்வையாளர் பிரசாத் முன்னிலையில் நடைபெற்ற இந்த மறைமுக ஏலத்தில் விவசாயிகள் 2 ஆயிரத்து 280 குவிண்டால் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்தனர். கும்பகோணம், பண்ருட்டி, விழுப்புரம், சேலம், தேனி, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த 8 வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டு பருத்தியை ஏலம் எடுத்தனர். இதில் ஒரு குவிண்டால் பருத்தி அதிகபட்சமாக ரூ.7,309-க்கு ஏலம் போனது. குறைந்தபட்சமாக ரூ.6,669-க்கு ஏலம் போனது. நேற்று நடைபெற்ற இந்த மறைமுக ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட பருத்தியின் மதிப்பு ரூ.1.56 கோடி என ஒழுங்குமுறை விற்பனை கூட அலுவலர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்