பெருமாள்பட்டியில் மலைப்பாம்பு பிடிபட்டது
பெருமாள்பட்டியில் மலைப்பாம்பு பிடிபட்டது
அன்னவாசல் அருகே கிளிக்குடி பெருமாள்பட்டியில் கருப்பர் கோவில் உள்ளது. இக்கோவில் பகுதியில் மலைப்பாம்பு ஒன்று இருப்பதாக அப்பகுதியினர் இலுப்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில், இலுப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் முருகேசன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மலைப்பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் மலைப்பாம்பை வனத்துறையினர் நார்த்தாமலை காப்பு காட்டில் கொண்டு விட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.