பரமக்குடியில் மலைப்பாம்பு பிடிபட்டது
பரமக்குடியில் மலைப்பாம்பு பிடிபட்டது
பரமக்குடி
பரமக்குடியில் இருந்து உரப்புளி கிராமத்திற்கு செல்லும் சாலையில் நேற்று இரவு மலைப்பாம்பு சாலையின் குறுக்கே சென்றுள்ளது. பின்பு அங்கிருந்து அருகில் உள்ள செங்கல் சேம்பருக்குள் நுழைய முயன்றது. அங்கிருந்தவர்கள் இதை பார்த்து பரமக்குடி தீயணைப்பு துறை வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி வீரர்கள் அங்கு வந்து கால்வாய்க்குள் இறங்கி மலைப்பாம்புவை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். பின்பு சிறிது நேரம் போராடி அந்த மலைப்பாம்பை உயிருடன் பிடித்தனர். மலைப்பாம்பு அதிக எடை கொண்டதாக இருந்ததால் தீயணைப்பு வீரர்களால் பாம்புவை இழுக்க முடியவில்லை.பின்பு ஐந்துக்கும் மேற்பட்ட வீரர்கள் ஒன்றாக சேர்ந்து அந்த மலைப்பாம்புவை கால்வாயில் இருந்து கரைக்கு இழுத்து வந்தனர். பின்பு அதை பரமக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு கொண்டு வந்து வனத்துறை அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராமநாதபுரம் மாவட்டத்திற்கு குடிநீர் பாசனத்திற்காக திறந்து விடப்பட்ட வைகை தண்ணீரில் மலைப்பாம்பு அடித்துவரப்பட்டிருக்கலாம் என தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.