சிங்கம்புணரி அருகே கல்லூரியில் புகுந்த மலைப்பாம்பு
சிங்கம்புணரி அருகே தனியார் கல்லூரியில் மலைப்பாம்பு புகுந்தது.;
சிங்கம்புணரி
சிங்கம்புணரியில் உள்ள ஒரு தனியார் பெண்கள் கல்லூரி வளாகத்தில் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று புகுந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவிகள் கூச்சலிட்டனர். இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சிங்கம்புணரி தீயணைப்பு நிலைய அலுவலர் பிரகாஷ் தலைமையிலான வீரர்கள் அங்கு சென்று புதருக்குள் மறைந்திருந்த மலைப் பாம்பை லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.