குப்பைகளை கண்மாய்க்குள் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து- நகராட்சி அலுவலகத்தில் குப்பைகளை கொட்டி நூதன போராட்டம்

சிவகங்கை நகராட்சி குப்பைகளை கண்மாய்க்குள் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கண்களை கட்டிக்கொண்டு நகராட்சி முன்பு குப்பையை கொட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-02-23 18:45 GMT


சிவகங்கை நகராட்சி குப்பைகளை கண்மாய்க்குள் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கண்களை கட்டிக்கொண்டு நகராட்சி முன்பு குப்பையை கொட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நூதன போராட்டம்

நீர்நிலைகளில் குப்பைகளை கொட்ட கூடாது என்ற விதிமுறைகளை மீறி சிவகங்கை நகராட்சி நிர்வாகம் மதுரை ரோட்டில் உள்ள வண்ணாத்தி கண்மாயில் குப்பைகளை கொட்டுவதற்கு தமிழக வாழ்வுரிமை கட்சி கண்டனம் தெரிவித்து இருந்தது. இதையடுத்து சிவகங்கை மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியினர் நேற்று சிவகங்கை நகராட்சி அலுவலகம் முன்பாக குப்பைகளை கொட்டி நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்துக்கு மாவட்ட செயலாளர் மலைபாலா தலைமை தாங்கினார். நகர செயலாளர் அஜித் செல்வராஜ், மாணவரணி அமைப்பாளர் மற்றும் திரைப்பட நடிகர் குட்டிமணி, நிர்வாகிகள் ராஜேஷ், மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தை

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்கள் கண்களை கருப்பு துணியால் கட்டி இருந்தனர். அவர்களிடம் நகராட்சி ஆணையாளர் பாண்டீசுவரி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

அப்போது அவர், 2 நாட்களில் கண்மாய்க்குள் குப்பை கொட்டும் பிரச்சினை தீர்வு காணப்படும் என தெரிவித்தார். இதனை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்