சிறந்து விளங்கும் விவசாய ஏற்றுமதியாளர்களுக்கு ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும்

சிறந்து விளங்கும் விவசாய ஏற்றுமதியாளர்களுக்கு ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-02-04 17:12 GMT

சிறந்து விளங்கும் விவசாய ஏற்றுமதியாளர்களுக்கு ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சரின் நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி, நடப்பு ஆண்டில் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் விவசாயிகளை கவுரவிக்கும் வகையில், விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் பரிசு தொகை வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது

அந்த வகையில் விவசாயிகள் தங்கள் நேரடி ஏற்றுமதி வர்த்தகத்தை மேற்கொள்ள ஊக்கப்படுத்தப்படுவார்கள். இதில் திருப்பத்தூர் மாவட்டத்தில் விவசாயம் செய்யும் வேளாண் மக்கள் மற்றும் குத்தகை முறையில் விவசாயம் செய்யும் அனைத்து விவசாயிகளும் கலந்து கொள்ள உழவன் செயலி மூலம் பதிவு செய்யலாம்.

விருப்பமுள்ள விவசாயிகள் வருகிற 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, இதர இணைப்பு ஆவணங்களையும் சேர்த்து மாவட்ட வேளாண் துணை இயக்குனர் (வேளாண் வணிகம்), 6-வது தளம், டி.பிளாக், திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகம் என்ற முகவரியில் வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்