மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து தனியார் நிறுவன ஊழியர் பலி...!
காஞ்சிபுரத்த்தில் மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்த தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்துள்ளார்.
காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு நகராட்சியில் மழை நீர் வடிகால் பணி நடைபெற்று வருகிறது. மழை காரணமாக அப்பகுதி சேறும் சகதியுமாக, பள்ளத்தில் மழை நீர் தேங்கியும் இருந்துள்ளது. மேலும், இந்த பணி கிடப்பில் போடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், அவ்வழியாக சென்ற தனியார் நிறுவன ஊழியர் லட்சுமிபதி (42) என்பவர் மழைநீர் வடிகால் பள்ளத்தில் தவறி விழுந்து பலியாகி உள்ளார். உரிய பாதுகாப்பின்றி நடைபெற்று வரும் மழை நீர் வடிகால் பணிகளால் உயிர் பலி அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்த போலீசார், சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.