லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி
ஸ்ரீபெரும்புதூர் அருகே லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.;
லாரி- மோட்டார் சைக்கிள் மோதல்
சென்னை பெருங்குடி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணபாபு (வயது 28). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கிருஷ்ணபாபுவும் அவரது நண்பர் ஜோதி மணியும் மோட்டார் சைக்கிளில் சென்னையில் இருந்து காஞ்சீபுரம் நோக்கி சென்றனர்.
ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடி அருகே கிருஷ்ணபாபு மோட்டார் சைக்கிளில் சென்றபோது பின்னால் வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீச பட்டனர்.
சாவு
இந்த விபத்தில் கிருஷ்ணபாபு பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். ஜோதி மணி பலத்த காயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பாலியான கிருஷ்ணபாபு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தப்பி ஓடிய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.