தனியார் செல்போன் கோபுரம் தீப்பிடித்து எரிந்தது

உளுந்தூர்பேட்டை அருகே தனியார் செல்போன் கோபுரம் தீப்பிடித்து எரிந்தது

Update: 2023-02-14 18:45 GMT

உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிளியூர் கிராம பகுதியில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான செல்போன் கோபுரம் உள்ளது. இந்த கோபுரத்தில் உள்ள ஜெனரேட்டர் அதிக மின் அழுத்தம் காரணமாக திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதைப்பார்த்து ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அதற்குள் தீ மளமளவென பரவி கொளுந்து விட்டு எரிய தொடங்கியது.

பின்னர் இது பற்றிய தகவல் அறிந்து வந்த உளுந்தூர்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் போராடி தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்து காரணமாக செல்போன் கோபுரம் செயல் இழந்ததால் செல்போன்களில் நெடவொர்க் கிடைக்காமல் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்