கார் மோதிய விபத்தில் நிறைமாத கர்ப்பிணியின் கணவர் பலி

தச்சம்பட்டு அருகே கார் மோதிய விபத்தில் நிறைமாத கர்ப்பிணியின் கணவர் பலியானார்.

Update: 2023-06-24 09:42 GMT

வாணாபுரம்

தச்சம்பட்டு அருகே கார் மோதிய விபத்தில் நிறைமாத கர்ப்பிணியின் கணவர் பலியானார்.

தச்சம்பட்டு அருகே உள்ள கீழ்கச்சராபட்டு இருதயபுரம் பகுதியை சேர்ந்த ராஜி மகன் ரவி (வயது 27). கூலி தொழிலாளி. சம்பவத்தன்று வேலை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பிக்கொண்டிருந்தார். திருவண்ணாமலை சாலையில் தென் மாத்தூர் அருகே வந்தபோது பின்னால் வந்த கார் இவரது மோட்டார்சைக்கிள் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டு ரவி படுகாயம் அடைந்தார்.

அந்த பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரவி இறந்து விட்டார்.

இது குறித்து தச்சம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்த ரவியின் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இவர்களுக்கு ராஜேஸ்வரி (3) என்ற மகள் உள்ளாள். கர்ப்பிணியின் கணவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்