சரியாக படிக்கவில்லை என பெற்றோர் கண்டித்ததால் பிளஸ்-1 மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை
அரும்பாக்கத்தில் சரியாக படிக்கவில்லை என பெற்றோர் கண்டித்ததால் பிளஸ்-1 மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
சென்னை அரும்பாக்கம், வள்ளுவர் சாலையை சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ். கூலி தொழிலாளி. இவருடைய மகன் அந்தோணி தினேஷ் (வயது 16). இவர், அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த அந்தோணி தினேசை, சரியாக படிக்கவில்லை என அவரது பெற்றோர் கண்டித்ததாக தெரிகிறது. இதனால் விரக்தி அடைந்த அந்தோணி தினேஷ், தனது பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.