இரண்டரை வயது குழந்தையின் தொண்டையில் சிக்கிய பிளாஸ்டிக் டப்பா... உயிரை காப்பாற்றிய டாக்டர்

இரண்டரை வயது குழந்தையின் தொண்டையில் சிக்கிய பிளாஸ்டிக் டப்பாவை அரசு மருத்துவமனை டாக்டர் போராடி வெளியே எடுத்தார்.

Update: 2024-10-03 01:55 GMT

திருமங்கலம்,

மதுரை மாவட்டம் திருமங்கலம் ரோஜா தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஹசீனாபானு. இவருக்கு இரண்டரை வயதில் ஆலியா என்ற பெண் குழந்தை உள்ளது. ஹசீனாபானு வேலைக்கு சென்றதால் குழந்தையை தனது தாய் மெகரசிபானுவிடம் விட்டுச்சென்றுள்ளார். வீட்டில் விளையாடி கொண்டிருந்த குழந்தை ஆலியா கீழே கிடந்த சிறிய பிளாஸ்டிக் தைல டப்பாவை எடுத்து வாயில் வைத்தது.

அப்போது டப்பா குழந்தையின் தொண்டையில் சிக்கிக்கொண்டது. இதனால் குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மெகரசிபானு உடனடியாக குழந்தையை திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

அங்கு பணியில் இருந்த டாக்டர் சிவகரன் மற்றும் செவிலியர்கள் குழந்தை ஆலியாவின் தொண்டையில் சிக்கிய பிளாஸ்டிக் டப்பாவை 15 நிமிடம் போராடி வெளியே எடுத்து உயிரை காப்பாற்றினர். டப்பாவை விழுங்கிய குழந்தையை காப்பாற்றிய அரசு மருத்துவமனை டாக்டர் மற்றும் செவிலியர்களுக்கு குடும்பத்தினர் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.

Full View

Tags:    

மேலும் செய்திகள்