ரெயில் மறியல் முயற்சி; 168 பேர் கைது

ராமநாதபுரத்தில் ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் கட்சியினர் 168 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2023-04-15 18:45 GMT

ராமநாதபுரத்தில் ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் கட்சியினர் 168 பேர் கைது செய்யப்பட்டனர்.

ரெயில் மறியல் போராட்டம்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்பை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு தொடர் போராட்டங்களை காங்கிரஸ் கட்சியினர் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி பதவி பறிப்பை கண்டித்து ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட பொறுப்பு குழு தலைவர் மலேசியா பாண்டியன் தலைமை தாங்கினார். பொறுப்புகுழு உறுப்பினர்கள் தெய்வேந்திரன், ரமேஷ்பாபு, ராஜாராம் பாண்டியன் கோபால், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் சாயல்குடி வேலுச்சாமி, கோட்டை முத்து, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் கலந்து கொண்டவர்கள் ரெயிலை மறிக்க முயன்றபோது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் காங்கிரஸ் கட்சியினருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

168 பேர் கைது

இதனிடையே அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் தலைமையில் காங்கிரசார் ரெயில்நிலையத்திற்கு மாற்றுப்பாதை வழியாக சென்று ரெயில் தண்டவாளம் பகுதியில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து போலீசார் 18 பெண்கள் உள்பட 168 பேரை கைதுசெய்தனர். போராட்டத்தில் ராமநாதபுரம் நகர் தலைவர் கோபி, திருப்புல்லாணி வட்டார தலைவர் சேதுபாண்டியன், மாவட்ட பொதுச்செயலாளர் கவுன்சிலர் மணிகண்டன், பெரியபட்டினம் செய்யது இபுராகிம், மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்துகிருஷ்ணன், மாவட்ட துணைத்தலைவர் மேகநாதன், சிறுபான்மை பிரிவு வாணி செய்யது இபுராகிம், முகமது யூசுப், மகிளா காங்கிரஸ் தலைவி ராமலட்சுமி, ராமேசுவரம் நகர் தலைவர் ராஜீவ்காந்தி, மாவட்ட நிர்வாகி பாபா செந்தில் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்