மயிலாடுதுறையில் உலா வரும் சிறுத்தையின் புகைப்படம் வெளியானது
சிறுத்தையை பிடிக்க ராட்சத வலை, கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.;
மயிலாடுதுறை,
மயிலாடுதுறை மாவட்டம் செம்மங்குளம், ஆரோக்கியநாதபுரம் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகின. இதையடுத்து, சிறுத்தையை பிடிக்கும் பணி தொடர்ந்து ஐந்தாவது நாளாக நீடித்து வருகிறது. சிறுத்தையை பிடிக்க ராட்சத வலை, கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே, மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் ஆடு ஒன்றை சிறுத்தை கடித்து கொன்றுவிட்டதாக தகவல் பரவியது. ஆனால், ஆட்டை சிறுத்தை கொல்லவில்லை என்றும், நாய் கடித்ததில் ஆடு இறந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
கடந்த இரு நாட்களாக வனத்துறையின் எந்த கேமராவிலும் சிறுத்தை சிக்காமல் இருந்து வந்த நிலையில், முதல் நாள் கண்காணிப்பு கேமராவில் சிக்கிய சிறுத்தையின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. சிறுத்தையை பிடிப்பதற்காக முதுமலையில் இருந்து நிபுணத்துவம் வாய்ந்த வன ஊழியர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.