ஆபாச வீடியோ எடுத்து பணம் பறித்த விபரீத காதலன்

கோவையில் இளம்பெண்ணை ஆபாசமாக வீடியோ எடுத்து பணம் பறித்த விபரீத காதலனை போலீசார் பொறிவைத்து பிடித்தனர்

Update: 2023-10-04 19:45 GMT


ஏதோ ஒரு ஈர்ப்பு....


அதனால் ஏற்படும் இனம்புரியாத காதல் உணர்வு...


இதுவும்...


இளமையின் திருவிளையாடல் தான்...


ஆம்...இந்த இளம் பெண்ணின் வாழ்க்கையும்


இப்படித்தான் பயணித்தது....


ஆரம்பத்தில் அவள்,அவன் மீது கொண்ட காதல் அடிக்கரும்பாய் இனித்தது...


பார்த்தது...பேசியது...பழகியது எல்லாம் அந்த பெண்ணுக்கு அதிர்ஷ்டம் போல் தோன்றியது..


ஆனால் அது முடிவில் துரதிஷ்டமானது...


அளவுக்குஅதிகமான நம்பிக்கை வைத்தாள் அவள்...ஆனால் அவன் அந்த நம்பிக்கையை, அவநம்பிக்கையாக்கி குழி தோண்டி புதைத்து விட்டான்.


அப்பாவியாய் அவள்...அடப்பாவியாய் அவன் ஆனான்...


ஆசை...ஆசையாய் விரும்பி காதலித்த அவளை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய விபரீத காதலன் ஆனான். இது பற்றி பார்க்கலாம்:-


காதலாக மாறியது


கோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர் 22 வயது இளம்பெண்.


கோவையில் ஐ.டி. நிறுவன ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-


கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த கட்டிட மேஸ்திரி ஜெயபிரகாஷ் (வயது 24) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. நாங்கள் 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் செல்போன் மூலமாக பேசியும் எங்களது காதலை வளர்த்து வந்தோம்.


என்னை ஜெயபிரகாஷ் பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு அழைத்து சென்றார். அப்போது அவர் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். நாங்கள் ஜாலியாக இருக்கும் போது அவர் எனக்கு தெரியாமல் அவரது செல்போனில் வீடியோ எடுத்து வைத்துள்ளார்.


சம்மதம் தெரிவித்தேன்..


மேலும் அவர் கோவையில் உள்ள பல்வேறு ஓட்டல்களுக்கும் என்னை அழைத்து சென்று ஜாலியாக இருந்தார். நாங்கள் திருமணம் செய்து கொள்வோம் என்ற எண்ணத்தில் நான் இதற்கு சம்மதம் தெரிவித்தேன்.


பின்னர் நான் ஜெயபிரகாஷிடம் என்னை திருமணம் செய்யும்படி கூறினேன். ஆனால் அவர் ஜாதகத்தில் பொருத்தம் இல்லை என காரணம் காட்டி என்னை திருமணம் செய்ய மறுத்து விட்டார். மேலும் அவர் என்னிடம் நீ திருமணம் செய்ய வலியுறுத்தினால் 2 பேரும் ஜாலியாக இருந்த ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் வெளி யிட்டு விடுவதாக என்னை மிரட்டினார்.


மேலும் அவர் சமூக வலைதளங்களில் வீடியோவை வெளியிடாமல் இருக்க வேண்டும் என்றால் பணம் தர வேண்டும் என மிரட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.


மிரட்டல்


இதனால் பயந்த நான் ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடாமல் இருக்க முதல் கட்டமாக ரூ.70 ஆயிரம் பணம் கொடுத்தேன். தொடர்ந்து அவர் மிரட்டி வந்ததால் மீண்டும் நான் அணிந்து இருந்த 3 பவுன் தங்கச்சங்கிலியை அவரிடம் கொடுத்தேன். என்னிடம் பணம் மற்றும் நகையை பெற்றுக்கொண்ட பின்னரும் தொடர்ந்து சமூக வலைதளத்தில் ஜாலியாக இருக்கும் வீடியோவை வெளியிட்டு விடுவதாக மிரட்டி பணம் கேட்டு கொலை மிரட்டல் விடு க்கிறார்.


பணம், நகையை பறித்த பின்னரும் தொடர்ந்து என்னை மிரட்டி வரும் ஜெயபிரகாஷ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.


கைது


புகாரின் பேரில் கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீசார் ஜெயபிரகாஷ் மீது பாலியல் பலாத்காரம், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். சிக்காமல் தலை மறைவான அவரை போலீசார் பொறிவைத்து பிடித்து கைது செய்தனர். பின்னர் ஜெயபிரகாசை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்