புகையிலை பொருட்களை பதுக்கியவர் கைது
வீரவநல்லூர் அருகே புகையிலை பொருட்களை பதுக்கியவர் கைது செய்யப்பட்டார்.
சேரன்மாதேவி:
வீரவநல்லூர் அருகே காருகுறிச்சி பகுதியில், வீரவநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காவுராஜன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காருகுறிச்சி, ரைஸ் மில் தெருவை சேர்ந்த சண்முகசுந்தர் ராஜன் (வயது 50) என்பவருடைய பெட்டிக்கடையை சோதனை செய்தனர். அதில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் முருகன் விசாரணை நடத்தி அவரை கைது செய்தார். மேலும் அவரிடம் இருந்து ரூ.87 ஆயிரம் மதிப்புள்ள 41 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.