சாலையில் நடந்து சென்றவர் மயங்கி விழுந்து சாவு

சாலையில் நடந்து சென்றவர் மயங்கி விழுந்து இறந்தார்.

Update: 2023-05-21 18:30 GMT

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல்-டீசல் விற்பனை நிலையம் அருகே நேற்று மாலை நடந்து சென்று கொண்டிருந்த ஆண் ஒருவர் திடீரென்று மயங்கி விழுந்தார். இதனை கண்டவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் 108 ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தது. ஆனால் மயங்கி விழுந்தவரை மருத்துவ உதவியாளர் பரிசோதனை செய்ததில், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். மேலும் இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் யார்? அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தாலுகா, கல்யாணம் பூண்டி கிராமம் அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த ராமமூர்த்தி (வயது 43) என்பது தெரியவந்தது. நேற்று பகல் நேரத்தில் பெரம்பலூரில் வெயில் கடுமையாக கொளுத்தியது. இதனால் ராமமூர்த்தி சுருண்டு மயங்கி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்