தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

Update: 2023-03-11 10:40 GMT

வீரபாண்டி

தர்மபுரி மாவட்டம் செல்லப்பன் நகர் பகுதியில் சேர்ந்த குமரேசன் என்பவரின் மகன் அய்யப்பன் (வயது 46). திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி ஜெ.ஜெ.நகர் பகுதியில் குடும்பத்துடன் தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருக்கு மகன் மற்றும் மகள் உள்ளனர். அய்யப்பனுக்கு போதிய வருமானம் இல்லாததால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினையால் மிகுந்த மனவேதனையில் இருந்த அய்யப்பன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வீரபாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

----------------------

Tags:    

மேலும் செய்திகள்