மோட்டார் சைக்கிளில் சென்றவர் மரத்தில் மோதி பலி

மோட்டார் சைக்கிளில் சென்றவர் மரத்தில் மோதி பலியானார்.

Update: 2023-08-04 20:36 GMT

காரியாபட்டி, 

காரியாபட்டி அருகே குரண்டி கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (வயது 37). இவர் தற்போது இவரது மனைவியுடன் முடுக்கன்குளம் கிராமத்தில் குடியிருந்து வருகிறார். வெள்ளைச்சாமி தனது உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் காரியாபட்டியில் இருந்து முடுக்கன்குளம் செல்வதற்காக நரிக்குடி சாலையில் சக்கரக்கோட்டை கிராமம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது வெள்ளைச்சாமி ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி, பனைமரத்தில் மோதியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு வெள்ளைச்சாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காரியாபட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வெள்ளைச்சாமியின் உடலை மீட்டு பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்