வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து ஒன்றரை வயது பெண் குழந்தை பலி

இந்த நிலையில் வழக்கம்போல் நேற்றிரவு குழந்தை ஆதிரா அவரது தாத்தா மகேந்திரனுடன் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தார்.;

Update:2023-04-25 16:55 IST

கடையம்

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகேயுள்ள பொட்டல்புதூர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணசாமி - பிரேமா என்ற தம்பதிக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகளாக ஆகின்றன. இந்த நிலையில் இவர்களுக்கு ஆதிரா என்ற ஒன்றரை வயதில் பெண் குழந்தை இருந்தது. இந்த நிலையில் வழக்கம்போல் நேற்றிரவு குழந்தை ஆதிரா அவரது தாத்தா மகேந்திரனுடன் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது அவரது வீட்டின் முன்பக்க காம்பவுண்ட் சுவர் தரை மட்டமாக இடிந்து ஆதிரா குழந்தை மீது விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த ஆதிரா அம்பை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் குழந்தை ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர். மகேந்திரனுக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்