சத்து குறைவான குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சத்து குறைவான குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை கலெக்டர் ஜெயசீலன் வழங்கினார்.;
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சத்து குறைவான குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை கலெக்டர் ஜெயசீலன் வழங்கினார்.
குழந்தை வளர்ச்சி திட்டம்
விருதுநகர் யூனியன் ஓ.கோவில்பட்டி, சங்கரலிங்காபுரம் ஆகிய கிராமங்களில் வசிக்கும் தாய்மார்களுக்கு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து உறுதி செய்யும் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து பெட்டகத்தை கலெக்டர் ஜெயசீலன் வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் பிறந்த 6 மாதம் உடைய கடுமையான மற்றும் மிதமான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் தாய்மார்களுக்கு 2 ஊட்டச்சத்து பெட்டகமும், 6 மாதம் முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தையும் வழங்கிட உத்தரவிட்டார்.
ஊட்டச்சத்து பெட்டகம்
அதனைத்தொடர்ந்து மாவட்டத்தில் ஓ. கோவில்பட்டி, சங்கரலிங்காபுரம் கிராமங்களில் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது. மாவட்டத்தில் 700 ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அருப்புக்கோட்டை, காரியாபட்டி, நரிக்குடி, ராஜபாளையம், சாத்தூர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், வெம்பக்கோட்டை, விருதுநகர், வத்திராயிருப்பு ஆகிய 12 வட்டாரங்களிலும் 308 கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுடைய 6 மாத குழந்தைகளுக்கு தலா 2 ஊட்டச்சத்து பெட்டகம் வீதம் 616 தாய்மார்களுக்கும், மிதமான ஊட்டச்சத்து குறைபாடுடைய 6 மாத குழந்தைகளுக்கு ஒரு ஊட்டச்சத்து பெட்டகம் வீதம் 392 தாய்மார்களுக்கும் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர் ராஜம், பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.