குறுவை நெல் சாகுபடிக்கு தயாராகும் நாற்றங்கால்

குறுவை நெல் சாகுபடிக்கு தயாராகும் நாற்றங்கால்

Update: 2023-06-01 18:45 GMT

நீடாமங்கலம் வேளாண் கோட்ட பகுதியில் கோடை சாகுபடி நிலத்தடி நீரில் மின் மோட்டாரை பயன்படுத்தி 16,500 ஏக்கரில் சாகுபடி செய்துள்ளனர். முன் கூட்டியே சாகுபடி செய்த வயல்களில் தற்போது எந்திரம் மூலம் அறுவடை பணிகள் நடந்து வருகிறது. பரப்பனாமேடு, மேலபூவனூர், காளாச்சேரி, சித்தமல்லி, கடம்பூர், பெரம்பூர், மன்னார்குடி சாலை உள்ளிட்ட இடங்களில் குறுவை சாகுபடி செய்ய பெண் பணியாளர்கள் விதை விட நாற்றங்கால் சமன் செய்து வருகின்றனர். நீடாமங்கலம் வேளாண் கோட்ட பகுதிகளில் குறுவை சாகுபடி பணி மும்முரமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்