ரூ.33 லட்சம் மதிப்பில் புதிய அங்காடி கட்டிடம், பயணிகள் நிழலகம்

பொறையாறு அருகே ரூ.33 லட்சம் மதிப்பில் புதிய அங்காடி கட்டிடம், பயணிகள் நிழலகத்தை நிவேதா முருகன் எம். எல். ஏ. திறந்து வைத்தார்.

Update: 2023-04-04 18:45 GMT

பொறையாறு:

பொறையாறு அருகே ரூ.33 லட்சம் மதிப்பில் புதிய அங்காடி கட்டிடம், பயணிகள் நிழலகத்தை நிவேதா முருகன் எம். எல். ஏ. திறந்து வைத்தார்.

புதிய அங்காடி கட்டிடம்

பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொறையாறு அருகே மாணிக்கபங்கு, ஆணைக்கோவில் கிராமத்தில்

பூம்புகார் சட்டமன்றத் தொகுதி வளர்ச்சி மேம்பாட்டு நிதி ரூ.15 லட்சம் மதிப்பில் புதிய அங்காடி கட்டிடம்.

திருக்களாச்சேரி , இலுப்பூர் ஊராட்சியில் ரூ.15 லட்சம் மதிப்பில் பயணிகள் நிழலகம், காட்டுச்சேரி ஊராட்சியில் தரைதல நீர் தேக்க தொட்டி என ரூ.33லட்சம் மதிப்பீட்டில் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது

திறப்பு விழா

இந்த கட்டிடங்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்கும் அர்ப்பணிப்பு விழா நடந்தது. விழாவிற்கு செம்பனார்கோவில் ஒன்றிய குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமை தாங்கினார். ஒன்றிய ஆணையர் மீனா, வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி, மாவட்ட கவுன்சிலர்கள், ராபியா நர்கிஸ்பானு அப்துல் மாலிக், துளசி ரேகா ரமேஷ் தரங்கம்பாடி வட்ட வழங்கல் அலுவலர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஒன்றியக்குழு துணைத்தலைவர்பாஸ்கர் வரவேற்றார்.

இதில் நிவேதா முருகன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு புதிய கட்டிடங்களை திறந்து வைத்து பேசினார்.அப்போது அவர் கூறுகையில்:- பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் அனைத்து வளர்ச்சி பணிகளும் படிப்படியாக நிறைவேற்றி தரப்படும். தமிழக அரசின் திட்டங்களை பெற்று பொதுமக்கள் பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

விழாவில் மயிலாடுதுறை மாவட்ட தி.மு.க.துணைச் செயலாளர் ஞானவேலன், செம்பனார்கோவில் ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் அப்துல் மாலிக், அன்பழகன் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்