விலையுர்ந்த மோட்டார் சைக்கிளை குறி வைத்து திருடிய மர்ம கும்பல்

விலையுர்ந்த மோட்டார் சைக்கிளை குறி வைத்து திருடிய மர்ம கும்பல்;

Update:2023-07-25 00:30 IST

கோவை

கோவை மாநகரில் நாள்தோறும் மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து போலீசார் தீவிரமாக கண்காணித்து நடவடிக்கைகள் எடுத்த போதிலும் மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கோவை கோவை கடைவீதி அங்கம்மாள் கோயில் வீதியில் வசித்து வருபவர் சுரேஷ் (வயது 25). ஐ.டி. ஊழியர். இவர் சமீபத்தில் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் வாங்கியிருந்தார். இந்த மோட்டார் சைக்கிளை தனது வீட்டிற்கு அருகில் நிறுத்தி இருந்தார். இந்த நிலையில் கடந்த 22-ந் தேதி அவர் காலையில் எழுந்து வெளியே வந்து பார்த்த போது அங்கிருந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை. மர்ம நபர்கள் அந்த மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரியவந்தது.

இதையடுத்து அவர் கோவை பெரிய கடை வீதி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். அந்த கண்காணிப்பு கேமராவில் 2 மோட்டார் சைக்கிளில் 4 பேர் வந்தனர். அதில் 2 பேர் ஆட்கள் அந்த பகுதியில் வருகிறார்களாக என்று கண்காணிக்கின்றனர். ஒருவர் மோட்டார் சைக்கிளில் தயார் நிலையில் அமர்ந்து இருக்கிறார். மற்றொரு நபர் ஸ்பேனர் உள்ளிட்ட உபகரணங்களை கொண்டு அந்த மோட்டார் சைக்கிளின் பூட்டை உடைத்தார். பின்னர் அந்த மோட்டார் சைக்கிளை ஸ்டார்ட் செய்து விட்டு அங்கிருந்து ஓட்டி செல்வது பதிவாகி இருந்தது. இதனிடையே மோட்டார் சைக்கிளை திருட வந்த நபர் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை நோக்கி 'பாய்... பாய்...' என்றவாறு கையசைத்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

---------------

மோட்டார் சைக்கிளை திருட வந்த நபர் கண்காணிப்பு கேமராவை பார்த்து கையசைத்த காட்சி.

---

Image1 File Name : P_VIJAYAN_Staff_Reporter-18419801.jpg

----

Reporter : P.VIJAYAN_Staff Reporter Location : Coimbatore - Coimbatore

Tags:    

மேலும் செய்திகள்