வீடு கட்டித்தருவதாக பல லட்சம் மோசடி
வீடு கட்டித்தருவதாக பல லட்சம் மோசடி குறித்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.;
கோவை
கோவை ரத்தினபுரியை சேர்ந்த சத்தியவதி உள்பட 10-க்கும் மேற்பட்டோர் நேற்று கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:- கோவை சாய்பாபா காலனி ராஜ அண்ணாமலை ரோட்டில் தனியார் நிறுவனம் உள்ளது.
இதன் இயக்குனர் விஜயகுமார் வீடு கட்டி தருவதாக சமூக வலைதளங்களில் தகவல் கொடுத்தார். அதை நம்பி ஏராளமானோர் அவரிடம் பணம் கொடுத்தோம்.
ஆனால் பணம் பெற்றுக் கொண்ட பின்பு அவர் நிலம் கிரயம் செய்து கொடுக்கா மலும், வீடு கட்டி கொடுக்காமலும் இருந்து வருகிறார். இது குறித்து அவரிடம் கேட்டால் உரிய பதில் அளிக்காமல் ஆட்களை வைத்து மிரட்டி வருகிறார்.
இது குறித்து சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். போலீசார் அவரை காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரித்தனர்.
அப்போது அவர் பணத்தை திருப்பிக் கொடுக்க 3 மாதம் அவகாசம் கேட்டார். ஆனால் 3 மாதம் முடிந்த பிறகும் அவர் பணம் கொடுக்காமல் பல லட்சம் மோசடி செய்து விட்டார்.
எனவே பணத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. இது குறித்து விசாரணை நடைபெறுகிறது.