மோட்டார் சைக்கிளில் சென்றவர் லாரி மோதி பலி

மோட்டார் சைக்கிளில் சென்றவர் லாரி மோதி பலி

Update: 2022-06-30 18:48 GMT

காரியாபட்டி

விருதுநகர் மாவட்டம் நரிக்குடியை சேர்ந்தவர் அரியமுத்து(வயது 50). இவர் நரிக்குடி முக்கு ரோட்டில் உள்ள ஒரு உணவகத்தில் சாப்பாடு வாங்கி விட்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். நரிக்குடி யூனியன் அலுவலகம் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அரியமுத்து சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து குறித்து நரிக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்