15 பன்றிகளுடன் மினி லாரி கவிழ்ந்தது
திருவெண்ணெய்நல்லூர் அருகே 15 பன்றிகளுடன் மினி லாரி கவிழ்ந்தது. இதில் 2 வாலிபர்கள் காயமடைந்தனா்.
திருவெண்ணெய்நல்லூர்:
திருச்செங்கோடு சூரப்பாளையத்தை சேர்ந்தவர் அருண்பாண்டியன். இவர், மினி லாரியில் 15 பன்றிகளை ஏற்றிக்கொண்டு செங்கல்பட்டில் இருந்து திருச்சி நோக்கி புறப்பட்டார். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே இருவேல்பட்டில் வந்தபோது, அரசு பஸ் மீது மோதி மினிலாரி கவிழ்ந்தது. இந்த விபத்தில் அருண்பாண்டியனுடன் மினி லாரியில் வந்த திருச்செங்கோடு சூரப்பாளையத்தை சேர்ந்த ராஜவேல் மகன் நாகராஜ் (21), நாமக்கல் குமாரபாளையத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் சங்கர் (32) ஆகிய 2 பேரும் காயமடைந்தனர். இவர்கள் இருவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.