7 நிமிட இடைவெளியில் ஒரு மெட்ரோ ரெயில்
7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.;
சென்னை,
பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரையில் இருந்து காலை 10.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை தாம்பரம் செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையேயான மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்தநிலையில், பயணிகள் வசதிக்காக இன்று காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பராமரிப்புப்பணி காரணமாக சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இரு மார்கமாக இன்று 44 புறநகர் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் மெட்ரோ நிர்வாகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மின்சார ரெயில்கள் ரத்து எதிரொலியாக மாநகர பேருந்துகள், மெட்ரோ ரெயில்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.