ஓட்டப்பிடாரத்தில்தமிழக மக்கள் முன்னேற்ற கழக கூட்டம்

ஓட்டப்பிடாரத்தில்தமிழக மக்கள் முன்னேற்ற கழக கூட்டம் நடந்தது. இதில் கட்சி நிறுவனத்தலைவர் ஜான்பாண்டியன் கலந்து கொண்டு பேசினார்.

Update: 2023-02-03 18:45 GMT

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் சிவன் கோவில் முன்பு நேற்று தமிழக மக்கள் முன்னேற்ற கழக பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தூத்துக்குடி மத்திய மாவட்ட தலைவர் விஜயபாண்டியன் தலைமை தாங்கினார். மத்திய மாவட்ட செயலாளர் லாரன்ஸ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் ஜான்பாண்டியன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், நான் தேவேந்திர குல வேளாளர் உரிமைக்காக குரல் கொடுக்கிறேன். நாங்கள் பட்டியல் இனத்திலிருந்து வெளியே செல்ல வேண்டும். தேவேந்திரகுல வேளாளர் என்பது அரசாணை மட்டுமல்ல. பிறக்கும் குழந்தைகள் அனைவரும் தேவேந்திரகுல வேளாளராக பிறக்க வேண்டும், என்றார்.

கூட்டத்தில் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர்கள் நெல்லையப்பன், அருண் பிரின்ஸ், சண்முக சுதாகர், அமுதமுரளி, மாநில மகளிர் அணி செயலாளர் நளினி சாந்தகுமாரி, மாவட்ட இனை செயலாளர்கள் ராஜா, மகேஷ், மாநில பொதுக்குழு உறுப்பினர் வேலுச்சாமி, ஓட்டப்பிடாரம் செயலாளர்கள் மகாராஜா, கருப்பசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட இளைஞரணி தலைவர் காளிதாஸ் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்