காதல்ஜோடியிடம் செல்போன்களை பறித்த முகமூடி கொள்ளையன்

காதல்ஜோடியிடம் செல்போன்களை பறித்த முகமூடி கொள்ளையனை ேபாலீசார் தேடி வருகின்றனர்.;

Update:2023-06-28 01:49 IST

விருதுநகர் பகுதியை சேர்ந்த 24 வயது வாலிபர், தனது காதலியை இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு உணவு அருந்த பாலவனத்தம் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு பள்ளி அருகில் கருப்பு துணியால் முகமூடி அணிந்து கொண்டு வந்த ஒரு நபர் காதல் ஜோடியிடம் கத்தியை காட்டி மிரட்டி 2 பேரின் செல்போன்களையும் பறித்துக்கொண்டு முட்புதருக்குள் ஓடி மறைந்து விட்டார். அப்போது அந்த வழியாக வந்தவர்களிடம் அவர்கள் நடந்த சம்பவம் குறித்து கூறினர். அப்போது அங்கு சென்று பார்த்த போது அந்த நபர் அங்கு இல்லை. இதுகுறித்து சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்