பிரியாணி ஆர்டர் கொடுப்பது போல் நடித்து ஓட்டலில் ரூ.25 ஆயிரத்தை திருடிய நபருக்கு வலைவீச்சு

பூந்தமல்லி அருகே பிரியாணி ஆர்டர் கொடுப்பது போல் நடித்து ஓட்டலில் ரூ.25 ஆயிரத்தை திருடிய நபரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

Update: 2022-11-04 09:38 GMT

பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை, பூந்தமல்லி- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தனியாருக்கு சொந்தமான ஓட்டல் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று காலை ஊழியர் ஒருவர் ஓட்டலை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் நிகழ்ச்சி ஒன்றிற்கு பிரியாணி ஆர்டர் கொடுக்க வேண்டும் என ஊழியரிடம் பேசி கொண்டிருந்தார். மேலும் இதுகுறித்து கடை உரிமையாளரிடம் பேச வேண்டும் என கூறியதையடுத்து அந்த வாலிபர் உள்ளே சென்று கடை உரிமையாளரை அழைத்து வர சென்ற நேரத்தில் அந்த மர்ம நபர் கடையின் கல்லா பெட்டியில் இருந்த ரூ.25 ஆயிரத்தை எடுத்து கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றார்.

இதுகுறித்து ஓட்டல் உரிமையாளர் அளித்த புகாரின்பேரில் நசரத்பேட்டை போலீசார் பணத்தை திருடிச் சென்ற நபர் யார்?என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்