சாலையை கடக்க முயன்ற லாரி டிரைவர் கார் மோதி பலி

நாட்டறம்பள்ளி அருகே சாலையை கடக்க முயன்ற லாரி டிரைவர் கார் மோதி பலியானார்.

Update: 2023-01-12 11:40 GMT

வேலூரை அடுத்த பலவன்சாத்து பாறைமேடு பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 56). லாரி டிரைவர். இவர் ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியில் இருந்து மிளகாய் பாரம் ஏற்றிக்கொண்டு வேலூர் வழியாக ஈரோடு பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டோல்கேட் பகுதியில் டீ குடிப்பதற்காக லாரியை நெடுஞ்சாலை ஓரம் பார்க்கிங் பகுதியில் நிறுத்திவிட்டு தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.

அப்போது கிருஷ்ணகிரி பகுதியில் இருந்து வேலூர் நோக்கி சென்ற கார் சங்கர் மீது மோதியது. இதில் லாரி டிரைவர் சங்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்- இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்