கபடி வீரர் வெட்டிக் ெகாலை
மேலூர் அருேக கபடி வீரர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 2 பேர் ராமநாதபுரம் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
கொட்டாம்பட்டி,செப்.2-
மேலூர் அருேக கபடி வீரர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 2 பேர் ராமநாதபுரம் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
கபடி வீரர்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கூலிபட்டியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவருடைய மகன் சத்தியமூர்த்தி (வயது 27). கபடி வீரரான இவர் சமீபகாலமாக துபாயில் வேலை பார்த்து வந்தார்.
சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்திருந்தார். நண்பர்களுடன் பல்வேறு பகுதிகளில் நடக்கும் ஜல்லிக்கட்டு, மாட்டுவண்டி பந்தயங்களுக்கு பார்வையிட சென்றுள்ளார். சில கபடி போட்டிகளிலும் பங்கேற்று வந்ததாக கூறப்படுகிறது..
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சத்தியமூர்த்தி, தனது வீட்டுக்கு பின்புறம் உள்ள மரத்தின் அடியில் கட்டிலில் படுத்து தூங்கினார். நள்ளிரவு அங்கு வந்த மர்ம கும்பல், தூங்கிகொண்டிருந்த சத்தியமூர்த்தியை சரமாரியாக வெட்டினர். உயிரை காப்பாற்றிக்கொள்ள சத்தியமூர்த்தி, அலறியபடி எழுந்து ஓடினார்.
வெட்டிக்கொலை
அந்த கும்பல் அவரை விரட்டிச் சென்று வெட்டி சாய்த்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியது.
இதற்கிடையே சத்தியமூர்த்தியின் அலறல் கேட்டு அவருடைய குடும்பத்தினர், அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். ரத்த வெள்ளத்தில் சத்தியமூர்த்தி பிணமாக கிடந்ததை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் மேலூர் துணை சூப்பிரண்டு ஆர்லியஸ் ரெபோனி மற்றும் கீழவளவு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாய் மூலமும் துப்புதுலக்கப்பட்டது.
சத்தியமூர்த்தியின் உடலை பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொைல சம்பவம் குறித்து தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். முன்விரோதம் காரணமாக இந்த படுகொலை நடந்து இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
2 பேர் கைது
இதற்கிடையே கபடி வீரர் சத்தியமூர்த்தி படுகொலை தொடர்பாக மேலூர் கூலிப்பட்டியை சேர்ந்த திருப்பதி என்பவருடைய மகன் சிவா (22), சோமசுந்தரம் என்பவருடைய மகன் திருப்பதி (23) ஆகிய இருவரும் ராமநாதபுரம் நீதித்துறை நடுவர் 2-வது கோர்ட்டில் சரண் அடைந்தனர். அவர்களை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைதொடர்ந்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.