தோட்டங்களில் சுற்றித்திரிந்த யானை கூட்டம்

தடிக்காரன்கோணம் பகுதியில் உள்ள தோட்டங்களில் கடந்த 4 நாட்களாக யானைகள் முகாமிட்டன. அந்த யானைகூட்டத்தை வனத்துறையினர் காட்டுக்குள் விரட்டினர்.

Update: 2022-09-21 21:28 GMT

அழகியபாண்டியபுரம்:

தடிக்காரன்கோணம் பகுதியில் உள்ள தோட்டங்களில் கடந்த 4 நாட்களாக யானைகள் முகாமிட்டன. அந்த யானைகூட்டத்தை வனத்துறையினர் காட்டுக்குள் விரட்டினர்.

யானை கூட்டம்

குமரி மாவட்டம் தடிக்காரன்கோணம் பகுதியில் தனியார் ரப்பர் தோட்டம், அன்னாசி பழத்தோட்டம் மற்றும் தென்னந்தோப்புகள் உள்ளன. இந்த தோட்டங்களில் அசம்புமலை பகுதியில் இருந்து கடந்த 4 நாட்களுக்கு முன்பு வந்த 4 யானைகள் இரண்டு குட்டிகளுடன் சுற்றித்திரிந்தன. அவ்வாறு சுற்றித்திரிந்த யானைகள் விளைபொருட்களையும் சேதப்படுத்தியது . மேலும் அந்த யானைகள் அந்த பகுதியில் உள்ள மனநலம் குன்றியவர்கள் வசிக்கும் ஒரு இல்லம் அமைந்துள்ள வளாகத்திற்குள் புகுந்துதது.

இதனையடுத்து அந்த யானைகளை விரட்டும் பணியில் அழகியபாண்டியபுரம் வனச்சரகர் மணிமாறன் மற்றும் வனவர் பிரவீன் ஆகியோர் முன்னிலையில் பாதுகாவலர்கள் பட்டாசு வெடித்து யானைகளை காட்டுக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

விரட்டும் பணியில் வனத்துறையினர்

ஆனால் அந்த யானைகள் அந்த இடத்தை விட்டு செல்லாமல் அங்கேயே சுற்றித்திரிந்தன. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பால் வெட்டும் தொழிலாளர்கள், கூலி தொழிலாளர்கள், பொதுமக்கள் என அனைவரும் அச்சம் அடைந்தனர்.

இந்தநிலையில் நேற்று அந்த யானை கூட்டத்தை வனத்துறையினர் காட்டுக்குள் விரட்டினர்.

இதுகுறித்து வனச்சரகர் மணிமாறன் கூறுகையில், "இந்த யானைகள் தங்களது குட்டிகளுக்கு உணவை தேடிச் சென்று சாப்பிடுவது தொடர்பாக அவைகளை பழக்கப்படுத்துவதற்காக மலையை விட்டு கீழே இறங்கி வருகிறது என்றார்.

4 நாட்களுக்கு பிறகு யானை கூட்டம் காட்டுக்குள் சென்றதால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்