முகவர்கள் கூட்டம்
திருநகரி, நெப்பத்தூர் ஊராட்சிகளில் அ.தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடந்தது.;
திருவெண்காடு அருகே திருநகரி மற்றும் நெப்பத்தூர் ஊராட்சிகளில் அ.தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் பொது உறுப்பினர்கள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு சீர்காழி கிழக்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார்.. ஒன்றிய அவைத் தலைவர் சிவ மனோகரன், துணைச்செயலாளர் திருமாறன், மாவட்ட பிரதிநிதி நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் மரகதம் அகோரமூர்த்தி வரவேற்றார். இதில் மாவட்ட அவை தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பாரதி கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் கீழமூர் கரை கிராமத்தில் உள்ள உப்பனாற்றில் கட்டப்பட்டு வரும் தென்னாம்பட்டினம்-திருமுல்லைவாசல் பாலப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாவட்ட பொருளாளர் செல்லத்துரை, மாவட்ட மீனவர் அணி துணைத்தலைவர் முத்து, மாணவரணி ஒன்றிய அமைப்பாளர் மாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய தொழில்நுட்ப அணி செயலாளர் அமிர்த சதீஷ்குமார் நன்றி கூறினார்.