புகையிலை விற்ற மளிகை கடைக்காரர் கைது

திசையன்விளை அருகே புகையிலை விற்ற மளிகை கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-05-10 19:53 GMT

திசையன்விளை:

திசையன்விளை அருகே உள்ள சண்முகபுரத்தை சேர்ந்தவர் ஆத்திமுத்து (வயது 51). இவர் சண்முகபுரத்தில் வீட்டுடன் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் திசையன்விளை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பிரியராஜ்குமார் மற்றும் போலீசார் நேற்று அங்கு சோதனை நடத்தினர். அப்போது அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த 15 கிலோ புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து, ஆத்திமுத்துவை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்