முன்னாள் மாணவர்கள் சார்பில் முப்பெரும் விழா

முன்னாள் மாணவர்கள் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.

Update: 2022-10-05 18:21 GMT

ஜோலார்ப்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏலகிரி மலையில் தனியார் தொண்டு நிறுவனங்கள் சார்பில் முன்னாள் மாணவர்கள் இணைந்து முப்பெரும் விழா நடத்தினர். விழாவுக்கு பாரதி தமிழ் சங்கத் தலைவர் சிவராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக ஜோலார்பேட்டை கிழக்கு ஒன்றிய செயலாளரும், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினருமான கவிதா தண்டபாணி கலந்துகொண்டார். வேலூர், சென்னை, காஞ்சீபுரம், திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து முன்னாள் மாணவர்கள் பங்கேற்றனர்.

மேலும் தனியார் தொண்டு நிறுவனங்களின் உறுப்பினர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள், முன்னாள் மாணவர்கள் இதில் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்