வீ்ட்டின் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த அரசு ஊழியர் பலி
சின்னசேலம் அருகே வீ்ட்டின் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த அரசு ஊழியர் பலி
சின்னசேலம்
சின்னசேலம் அருகே மரவாநத்தம்கிராமம் குமரன் நகர் பகுதியை சேர்ந்தவர் தயாளன்(வயது 57). சின்னசேலம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஈரியூர் கிராம ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்ட ஒருங்கிணைப்பாளராக பணிபுரிந்து வந்தார்.
தயாளன் சம்பவத்தன்று இரவு வீட்டு படிக்கட்டில் இருந்து தவறி விழுந்தார். இதில் தலையில் படுகாயம் அடைந்த அவரை உறவினர்கள் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி தயாளன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தயாளன் மனைவி கலைவாணி கொடுத்த புகாரின்பேரில் சின்னசேலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராசு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.