10 நாட்களாக ஒரே இடத்தில் இருக்கும் நல்ல பாம்பு
வல்லம் கிராமத்தில் 10 நாட்களாக ஒரே இடத்தில் நல்ல பாம்பு உள்ளது.
சேத்துப்பட்டு
பெரணமல்லூர் ஒன்றியம் வல்லம் கிராமத்தில் ஏரிக்கரை ஓரத்தில் மரம் வெட்ட சென்ற தொழிலாளி அங்குள்ள வேப்ப மரத்தின் அடியில் 6 அடி நீள நல்ல பாம்பை பார்த்தார்.
உடனடியாக ஓடி வந்து வல்லம் கிராமத்தில் உள்ள மக்களிடம் கூறினார்.
பின்னர் அனைவரும் சென்று நல்ல பாம்பு இருக்கும் இடத்தை சென்று பார்த்தனர்.
தொடர்ந்து 10 நாட்களுக்கு மேலாக அதே இடத்தில் நல்லபாம்பு உள்ளது.
இதையடுத்து வல்லம் கிராமத்தை சுற்றியுள்ள தென்கைரை, பெரும்பாக்கம், ஊர்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் தினமும் அங்கு சென்று பாம்புக்கு பால் வைத்து வழிபாடு செய்து வருகின்றனர்.
சில பெண்களுக்கு அருள் வந்து இந்த இடத்தில் கோவில் கட்ட வேண்டும் என்று கூறினர்.
இதனால் இந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.