செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரம்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைக்கு தி.மு.க. சார்பில் தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.;

Update:2023-03-04 00:15 IST

செங்கோட்டை:

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைக்கு தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் வழக்கறிஞர் சிவபத்மநாதன் ஏற்பாட்டின்பேரில் தங்க மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு செங்கோட்டை நகர செயலாளர் வழக்கறிஞர் ஆ.வெங்கடேசன் தலைமை தாங்கினார். செங்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜேஷ் கண்ணன் முன்னிலை வகித்தார். மருத்துவமனை ஆய்வக நுட்பநர் ஹரிஹர நாராயணன் வரவேற்றார். பின்னர் குழந்தைக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் நகர அவைத் தலைவர் காளி, துணை செயலாளர்கள் ஜோதிமணி, நகர்மன்ற உறுப்பினர் பேபி ரெசவுபாத்திமா, நிர்வாகிகள் நசீர் என்ற அகமதுமீரான், ஆ.சண்முகராஜா, கோவிந்தராஜ், சேட்டு என்ற சேக்மதார், இப்ராஹிம், பாலு, மாரியப்பன், கழக பேச்சாளர் செங்கை குற்றாலிங்கம் மற்றும் மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்