மின்சாரம் தாக்கி ஆடு மேய்க்கும் தொழிலாளி பலி
ஒடுகத்தூர் அருகே மின்சாரம் தாக்கி ஆடு மேய்க்கும் தொழிலாளி பலியானார்.
ஒடுகத்தூரை அடுத்து வண்ணாந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் சாலமோன் (வயது 39). ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் சாலமோன் அவருக்கு சொந்தமான ஆடுகளை மேய்க்க உறவினர் டேனியல் என்பவரின் மாந்தோப்பிற்கு ஓட்டிச் சென்றார். அப்போது டிரான்ஸ்பார்மரில் இருந்து அறுந்து விழுந்த மின் ஒயரை மிதித்ததாக கூறப்படுகிறது.
இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். வெகு நேரமாகியும் சாலமோன் மற்றும் ஆடுகள் வீட்டுக்கு வராததால் சந்தேகம் அடைந்த தாயார் சுசிலா தேடிப் பார்த்தபோது சாலமோன் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் வேப்பங்குப்பம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் தாய் சுசிலா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.