மேய்ச்சலுக்கு சென்ற ஆட்டை அடித்துக் கொன்ற சிறுத்தை

விக்கிரமசிங்கபுரத்தில் மேய்ச்சலுக்கு சென்ற ஆட்டை சிறுத்தை அடித்துக் கொன்றது.

Update: 2022-08-19 19:58 GMT

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரத்தில் மேய்ச்சலுக்கு சென்ற ஆட்டை சிறுத்தை அடித்துக் கொன்றது.

மேய்ச்சலுக்கு சென்றபோது...

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளான அனவன்குடியிருப்பு, பொதிகையடி, திருப்பதியாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் யானை, காட்டுப்பன்றி, கரடி, மிளா உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துகின்றன. மேலும் சிறுத்தைகளும் புகுந்து ஆடு, மாடு, நாய்களை அடித்து கொன்று வேட்டையாடுகின்றன.

இந்த நிலையில் அனவன்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த முருகேசன் மனைவி லிட்டில் மேரி (வயது 34) தனது ஆடுகளை அங்குள்ள மலையடிவார புல்வெளி பகுதிக்கு மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார்.

ஆட்டை கடித்து குதறிய சிறுத்தை

அப்போது அங்கு பதுங்கியிருந்த சிறுத்தை திடீரென்று ஒரு ஆட்டை கடித்து குதறியது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த லிட்டில் ேமரி கூச்சலிட்டதால், ரத்த காயத்துடன் ஆட்டை கீழே போட்டு விட்டு சிறுத்தை வனப்பகுதிக்குள் ஓடி விட்டது. எனினும் ஆடு இறந்தது.

எனவே மலையடிவார பகுதிகளுக்கு வனவிலங்குகள் புகாதவாறு வனத்துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்