கிணற்றில் தவறி விழுந்த ஆடு உயிருடன் மீட்பு
கிணற்றில் தவறி விழுந்த ஆடு உயிருடன் மீட்கப்பட்டது.
கறம்பக்குடி அருகே தொண்டமான் ஊரணி கிராமத்தை சேர்ந்தவர் குமார். விவசாயி. இவரது ஆடு அப்பகுதியில் உள்ள 50 அடி ஆழ தண்ணீர் இல்லாத கிணற்றில் விழுந்துவிட்டது. இதுகுறித்து அவர் கறம்பக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் கயிற்றின் மூலம் கிணற்றில் இறங்கி ஆட்டை உயிருடன் மீட்டு மேலே கொண்டு வந்தனர். பின்னர் அந்த ஆடு உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.