சிவசைலம் ஆசிரமத்துக்கு பொருட்கள் வழங்கும் விழா

கடையம் அருகே சிவசைலம் ஆசிரமத்துக்கு பொருட்கள் வழங்கும் விழா நடந்தது.

Update: 2023-03-30 18:45 GMT

கடையம்:

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, கடையம் அருகே சிவசைலம் ஆசிரமத்தில் உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகள் பயன்பெறும் வகையில் ரூ.25 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர் மைதீன் பீவி கோதர் மைதீன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் கலந்து கொண்டு, பாய், வாளி, கப்பு உட்பட ரூ.25 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை வழங்கினார். இதில் மாவட்ட துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வன், அவைத்தலைவர் கே.பி.என்.சேட், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் புகாரி மீரா ஷாகிப், தலைமை ஆசிரியர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்