பட்டுக்கோட்டை
பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்ள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழாவும், 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் வெற்றி பெற்ற பள்ளிகளுக்கு பாராட்டு சான்று வழங்கும் விழாவும் நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட கல்வி அலுவலர் திராவிட செல்வம் தலைமை தாங்கினார். பள்ளி கல்வித்துறை சார்பில் பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தைச்சேர்ந்த 19 பள்ளிகளுக்கு 3132 விலையில்லா சைக்கிள்களை அண்ணாத்துரை எம்.எல்.ஏ வழங்கி பேசினார். விழாவில் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பழனிவேல், மதுக்கூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பிரகாஷ், தலைமை ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள், உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சக்திவேல் வரவேற்றார். முடிவில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) பாமா நன்றி கூறினார்.