கவர்னர் மாளிகை அருகே தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு
தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை,
சென்னை, கிண்டி கவர்னர் மாளிகை எதிரே உள்ள இடத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கவர்னர் மாளிகையில் ஜனாதிபதி தங்கியிருக்கும் நிலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது . இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.