வீட்டில் பயங்கர சத்தத்துடன் தீ; உடல்கருகி பலியான தொழிலாளி

வீட்டில் பயங்கர சத்தத்துடன் தீ விபத்தில் உடல்கருகி ப தொழிலாளி பலியானார்.

Update: 2023-05-06 19:48 GMT

சாத்தூர், 

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகா கஞ்சம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜோசப் (வயது 38). இவருக்கு பீலா என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். ஜோசப் தூத்துக்குடி துறைமுகத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு மனைவியை விட்டு பிரிந்து தனது சொந்த ஊரில் தாயுடன் வசித்து வந்தார். மேலும் இவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மருத்துவ சிகிச்சை பெற்று வந்ததினால் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று வீட்டில் இருந்தவர்கள் வெளியே சென்றுவிட்ட நிலையில் தனியாக இருந்த ஜோசப் மாத்திரை சாப்பிட்டு விட்டு வீட்டில் தூங்கி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது வீட்டில் இருந்து பயங்கர சத்தத்துடன் தீப்பற்றி எரிந்து புகை வந்துள்ளது. இதையடுத்து ஜோசப் வீட்டின் அருகில் இருந்தவர்கள் சாத்தூர் தாலுகா போலீஸ் நிலையத்திற்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் வீட்டிற்குள் ஜோசப் உடல்கருகிய நிலையில் பிணமாக கிடந்தார். வீட்டில் உள்ள பொருட்களும் எரிந்து நாசமானது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாலுகா போலீசார் ஜோசப்பின் உடலை பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜோசப் தீக்குளித்து தற்கொலை செய்தாரா, மின்கசிவு காரணமாக வீடு தீப்பற்றியதா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணங்களில் சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறன்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்