கரும்பு தோட்டத்தில் தீ விபத்து

கரும்பு தோட்டத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2023-01-18 18:41 GMT

கந்தர்வகோட்டை அருகே மட்டங்கால் கிராமத்தை சேர்ந்தவர்கள் முத்துச்சாமி, இந்துமதி. இவர்களது விவசாய நிலத்தில் சுமார் 4 ஏக்கரில் கரும்பு பயிரிட்டிருந்தனர். இந்நிலையில் கரும்பு தோட்டத்தில் தீப்பிடித்தது. இதுகுறித்து தகவல் அறிந்த கந்தர்வகோட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும், கரும்புகள் எரிந்து நாசமானது.

இதேபோல் அக்கட்சிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவருக்கு சொந்தமான தைல மரக்காட்டில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்