கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி அருகே நத்தமேடு கிராமத்தில் விவசாயி ராஜி என்பவருக்கு சொந்தமான கரும்பு தோட்டத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இது பற்றிய தகவலறிந்து கள்ளக்குறிச்சி தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள கரும்பு பயிர் எரிந்து சேதம் அடைந்தது. கரும்பு வயலுக்கு மேலே செல்லும் மின் கம்பிகள் உரசி தீப்பிடித்ததா? அல்லது வேறு யாரேனும் மர்ம நபர்கள் தீ வைத்தனரா? என்பது குறித்து போலீசாரும், தீயணைப்பு துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.