சாத்தூர் அருகே பிளாஸ்டிக் கவர் குடோனில் தீ விபத்து...!

சாத்தூர் அருகே சடையம்பட்டியில் பிளாஸ்டிக் கவர் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2022-07-03 14:05 GMT

சாத்தூர்,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகா சடையம்பட்டியை சேர்ந்தவர் கனகராஜ்(வயது 53). இவர் அப்பகுதியில் பிளாஸ்டிக் கவர் கம்பெனி நடத்தி வருகிறார். இந்த கம்பெனியில் பழைய பிளாஸ்டிக் கவர் வாங்கி விற்பனை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு பிளாஸ்டிக் கவர் குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனே தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர், ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பல்லாயிரக்கணக்கான மதிப்புள்ள பிளாஸ்டிக் கவர்கள் தீயில் எரிந்து சேதமானது.

இதேபோல் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறிய சரக்கு வாகனம் முன்பகுதி முழுவதும் தீயில் எரிந்து சேதமானது. இந்த தீ விபத்து குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்